ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளா அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்..!!


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளா அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்..!!
x

image courtesy; instagram/aibandohling27

தினத்தந்தி 12 Oct 2023 11:35 AM IST (Updated: 12 Oct 2023 11:39 AM IST)
t-max-icont-min-icon

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நடப்பு சீசனில் எஞ்சிய போட்டிகளில் இருந்து காயம் காரணமாக கேரளா அணியின் வீரர் ஐபன் டோஹ்லிங் விலகியுள்ளார்.

திருவனந்தபுரம்,

10-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கேரளா அணிக்காக மேகாலயாவை சேர்ந்த ஐபன் டோஹ்லிங் பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த மும்பை - கேரளா இடையிலான ஆட்டத்தின் போது காயமடைந்து பாதியில் வெளியேறினார். காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால் அவர் இந்த சீசனுக்கான எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது கேரளா அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் கேரளா அணியின் வெற்றிகளில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டோஹ்லிங், 'இது போன்ற ஒரு முக்கியமான நேரத்தில் காயம் ஏற்பட்டது கடினமானது. எனது அணியான கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காக இந்த ஐ.எஸ்.எல். தொடரில் என்னால் மேற்கொண்டு விளையாட முடியாது' என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story