ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: அரையிறுதி போட்டிகள் நாளை தொடக்கம்...!

11 அணிகள் பங்கேற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
Image Courtesy: @IndSuperLeague
Image Courtesy: @IndSuperLeague
Published on

மும்பை,

11 அணிகள் பங்கேற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை முதல் தொடங்க உள்ளன. முதலாவது அரையிறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் மும்பை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பையில் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ஐதராபாத்தில் 9-ந் தேதி நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் முதல் சுற்று ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான்- ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையடுத்து 12-ந் தேதி பெங்களூரில் முதல் அரையிறுதியின் 2-வது சுற்று ஆட்டமும், 13-ந் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது அரையிறுதியில் 2-வது சுற்று ஆட்டமும் நடக்கிறது. இறுதிபோட்டி, கோவாவில் 18-ந் தேதி நடக்கிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com