மெர்டேக்கா கால்பந்து தொடர்; போட்டி அட்டவணையில் மாற்றம்..!

மெர்டேக்கா கால்பந்து தொடரில் இருந்து கடைசி நேரத்தில் பாலஸ்தீனம் விலகியதைத் தொடர்ந்து போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Representative Image
Representative Image
Published on

கோலாலம்பூர்,

42-வது மெர்டேக்கா கால்பந்து தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் முதலில் மலேசியா, இந்தியா, பாலஸ்தீனம் மற்றும் தஜிகிஸ்தான் இடம் பெற்றிருந்தன. இதில் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் பாலஸ்தீனம் விலகியது.

இந்நிலையில் மலேசியா கால்பந்து சங்கம், பாலஸ்தீனம் கடைசி நேரத்தில் தொடரில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, 2023 மெர்டேக்கா போட்டிகளை மாற்றுவதாக அறிவித்துள்ளது. இந்த தொடரானது இந்தியா, தஜிகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய மூன்று அணிகளுடன் நாக்-அவுட் முறையில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

அதன்படி வரும் 13ஆம் தேதி அன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்திய அணி மலேசியா உடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் வரும் 17ஆம் தேதி அன்று தஜிகிஸ்தான் உடன் மோதும். அதில் வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com