ஆசிய கோப்பை ஆக்கி: தென் கொரியாவுடனான ஆட்டம் சமனில் முடிந்ததால், இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தது இந்தியா


ஆசிய கோப்பை ஆக்கி: தென் கொரியாவுடனான ஆட்டம் சமனில் முடிந்ததால், இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தது இந்தியா
x

image tweeted by @ hockey india

சூப்பர் 4 சுற்றில் இந்தியா-தென் கொரிய அணிகள் மோதிய ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.

ஜகார்த்தா,

11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்திய நடப்பு சாம்பியனான இந்தியா, மலேசியாவுடனான அடுத்த ஆட்டத்தில் 'டிரா' கண்டது. இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று தென்கொரியாவுடன் மோதியது.

ஜப்பானுக்கு எதிராக மலேசியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியும் என்ற நிலை உருவானது.

இந்த சூழலில் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன. சூப்பர் 4 சுற்றின் முடிவில் இந்தியா, மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய அணி தலா ஐந்து புள்ளிகளுடன் இருந்தது. ஆனால் கோல்களின் அடிப்படையில் மலேசியா மற்றும் தென் கொரிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுடன் வெளியேறியது.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தென் கொரிய அணி மலேசியாவை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் இந்தியா மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.


Next Story