ஹாக்கி உலககோப்பை: அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 'டிரா'...!

ஹாக்கி உலககோப்பை தொடரில் அர்ஜெண்டினா-பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
Image Courtesy: @TheHockeyIndia
Image Courtesy: @TheHockeyIndia
Published on

புவனேஸ்வர்,

15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

' ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், 'சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணி வீரர்களும் கோல் அடித்தனர். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தனர். இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து 3வது மற்றும் 4வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் மேற்கொண்டு 2 கோல் வீதம் அடித்தனர்.

இறுதியில் இரு அணிகளும் தலா 5 கோல் அடித்தன. இதனால் ஆட்டம் 5-5 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த போட்டி முடிவில் குரூப் ஏ வில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. இந்தன் அடிப்படையில் குரூப் ஏவில் ஆஸ்திரேலியா முதல் இடமும், அர்ஜெண்டினா 2வது இடமும், பிரான்ஸ் 3வது இடமும், தென் ஆப்பிரிக்கா 4வது இடமும் பெற்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com