காஞ்சி ஹாக்கி கிளப் நடத்திய போட்டி : அரியலுர் அணிக்கு முதல் பரிசு...!

காஞ்சி ஹாக்கி கிளப் நடத்திய விளையாட்டு போட்டி நேற்று காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
காஞ்சி ஹாக்கி கிளப் நடத்திய போட்டி : அரியலுர் அணிக்கு முதல் பரிசு...!
Published on

காஞ்சிபுரம்,

காஞ்சி ஹாக்கி கிளப் நடத்திய விளையாட்டு போட்டி நேற்று காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட்' முறையில் போட்டி நடந்தது.ஒரு குழுவில் ஏழு பேர் மட்டும் பங்கேற்கும் வகையில் விளையாட்டு போட்டி நடந்தது.

இறுதி போட்டியில் காஞ்சிபுரம் அணியும், அரியலுர் அணியும் மோதிக் கொண்டன.இதில், ஐந்து கோல் போட்டு அரியலுர் அணி வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசு 15 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு 10 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு 7,000 ரூபாய் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com