உசைன் போல்ட்டை நினைவுப்படுத்திய 14-வயது தடகள வீரர்.. உலக சாதனை படைத்து அசத்தல்

டிவைன் ஐஹேம் 100மீ ஓட்டப்பந்தய தூரத்தை 10.30 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
image courtesy: twitter/@wldathleticshub
image courtesy: twitter/@wldathleticshub
Published on

லண்டன்,

இங்கிலாந்து தடகள வீரர் டிவைன் ஐஹேம் (வயது 14). இவர் இங்கிலாந்தில் உள்ள லீ வேலி தடகள மையத்தில் நேற்று நடைபெற்ற 14 வயதினருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு, வெறும் 10.30 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஜமைக்காவின் சச்சின் டென்னிஸ் 10.51 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள ஐஹேம் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இவரது வேகம் பிரபல ஓட்டப்பந்தய ஜாம்பவான் வீரரான உசைன் போல்ட்டை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். மேலும் இதேபோல் பயிற்சி மேற்கொண்டு அசத்தும் பட்சத்தில் 100 மீட்டர் ஓட்டத்தை வெறும் 9.58 வினாடிகளில் முடித்த உசைன் போல்ட்டின் உலக சாதனையை அவர் முறியடிக்க முடியும் என்று கூறப்படுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com