உலக இளையோர் வில்வித்தையில் இந்தியா 3 தங்கம் வென்றது


உலக இளையோர் வில்வித்தையில் இந்தியா 3 தங்கம் வென்றது
x
தினத்தந்தி 15 Aug 2021 1:45 AM GMT (Updated: 2021-08-15T07:15:07+05:30)

உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கம் வென்றது.

வார்சா,

உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி போலந்தில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் அணிக்கான காம்பவுண்ட் கேடட் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-துருக்கி அணிகள் சந்தித்தன. பர்னீத் கவுர், பிரியா குர்ஜார், ரிது வர்ஷினி ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர் இலக்கை நோக்கி துல்லியமாக அம்புகளை எய்து அசத்தியதுடன் 228-216 என்ற புள்ளி கணக்கில் துருக்கியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். முன்னதாக தகுதி சுற்றில் மூவரும் இணைந்து மொத்தம் 2,067 புள்ளிகள் எடுத்து புதிய உலக சாதனை படைத்தனர். இதற்கு முன்பு அமெரிக்கா 2,045 புள்ளி எடுத்ததே சாதனையாக இருந்தது.

இதன் ஆண்கள் பிரிவில் சஹில் சவுத்ரி, மிஹிர் நிதின், குஷல் தலால் ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர் 233-231 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினர். இதேபோல் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் பிரியா குர்ஜார்- குஷல் தலால் ஜோடி 155-152 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை சாய்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

Next Story