செஸ் ஒலிம்பியாட் : முதல் சுற்றில் இந்திய அணிகள் எந்த அணியை எதிர்கொள்கிறது ? - முழு விவரம்

இந்திய ஆடவர் அணியின் 'ஏ ' பிரிவு அணி ஜிம்பாப்வேவை இன்று எதிர்கொள்கிறது.
Image Courtesy : FIDE/Lennart Ootes
Image Courtesy : FIDE/Lennart Ootes
Published on

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.இதன்படி இந்தியா ஓபன் பிரிவில் 3 அணிகளையும், பெண்கள் பிரிவில் 3 அணிகளையும் களம் இறக்குகிறது.

இந்திய ஆடவர் அணியின் 'ஏ ' பிரிவு அணி ஜிம்பாப்வேவை இன்று எதிர்கொள்கிறது.இந்திய ஏ அணியில் செஸ் வீரர்கள் ஹரிகிருஷ்ணன் ,நாராயணன் ,விதித் குஜராத்தி ,சசி கிரண் ,அர்ஜுன் எர்கியாசி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா 'பி' அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்த்து விளையாடுகிறது.நிஹால் சரின்,குகேஷ் ,பிரக்ஞானந்தா,அதிபன்,ரவுனாக் சத்வானி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா 'சி' அணி தெற்கு சூடானை எதிர்கொள்கிறது.சூர்யா சேகர் கங்குலி ,சேதுராமன் , அபிஜீத் குப்தா ,கார்த்திகேயன் முரளி ,அபிமன்யு புரணிக் ஆகியயோர் இடம் பெற்றுள்ளனர்

பெண்கள் பிரிவில்,

* இந்தியா 'ஏ' அணி தஜிகிஸ்தானை எதிர்கொள்கிறது. கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி,ஆகியயோர் இடம் பெற்றுள்ளனர்

* இந்தியா 'பி' அணி, வேல்ஸை எதிர்கொள்கிறது.வந்திகா அக்ரவால், சவும்யா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி, திவ்யா தேஷ்முக்,ஆகியயோர் இடம் பெற்றுள்ளனர்

* இந்தியா 'சி' அணி ,ஹாங்காங்கை எதிர்கொள்கிறது.ஈஷா காரவடே, சாஹிதி வர்ஷினி, பிரத்யூஷா போட்டா, நந்திதா, விஷ்வா வஸ்னவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com