மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி: இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் வீராங்கனைகள்


மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி: இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் வீராங்கனைகள்
x
தினத்தந்தி 19 Aug 2023 5:29 AM GMT (Updated: 19 Aug 2023 6:54 AM GMT)

மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் இந்த அலைச்சறுக்கு போட்டியில் ஆண்கள் பிரிவில் நடைபெற்ற அரைஇறுதிப் போட்டியில் ஸ்வீடன் வீரர் கியான் மார்டின், ஜப்பான் வீரர் ரைஹா ஓனோவுடன் மோதினார். இந்த போட்டியில் ரைஹா ஓனோவை வீழ்த்தி வெற்றி பெற்ற கியான் மார்டின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அதே போல பெண்கள் பிரிவில் நடைபெற்ற அரைஇறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஜப்பான் வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். முதல் அரைஇறுதிப் போட்டியில் ஷினோ மட்சுடாவும் 2-வது அரைஇறுதிப் போட்டியில் சாரா வகிடாவும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை வீரர்கள் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story