பாரா ஒலிம்பிக்; வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

பாரா ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சரத்குமாருக்கும் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Image Courtesy: X (Twitter) / கோப்புப்படம்
Image Courtesy: X (Twitter) / கோப்புப்படம்
Published on

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 ஆட்டத்தில் 1.85 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் கடந்த 3 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வென்ற சாதனையை மாரியப்பன் படைத்திருக்கிறார். உலக அளவிலான போட்டிகளில் மேலும், மேலும் சாதனைகளை படைக்க மாரியப்பனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போட்டியில் 1.88 மீ. உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சரத்குமாருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com