புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்..!

இன்று நடைபெற உள்ள மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - தபாங் டெல்லி அணிகள் மோத உள்ளன.
image courtesy; twitter/ @ProKabaddi
image courtesy; twitter/ @ProKabaddi
Published on

புனே,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இரவு 9 மணிக்கு நடைபெற உள்ள மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - தபாங் டெல்லி அணிகள் மோத உள்ளன.

தற்போது வரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளி பட்டியலில் பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன் மற்றும் யு மும்பா ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com