புரோ கபடி லீக்; பெங்களூரு புல்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்

இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன .
புரோ கபடி லீக்; பெங்களூரு புல்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்
Published on

ஐதராபாத்,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ, பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன . தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com