கைப்பந்து லீக்: பெங்களூரு அணி 5-வது வெற்றி


கைப்பந்து லீக்: பெங்களூரு அணி 5-வது வெற்றி
x

கைப்பந்து லீக் போட்டி சென்னை உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

சென்னை,

9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு டார்படோஸ் அணி 14-16, 19-17, 13-15, 15-10, 15-11 என்ற செட் கணக்கில் கோழிக்கோடு ஹீரோசை வீழ்த்தியது. 7-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூருவுக்கு இது 5-வது வெற்றியாகும். கோழிக்கோடு அணிக்கு 2-வது தோல்வியாகும்.

இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் - மும்பை மீட்டியார்ஸ் அணிகள் மோதுகின்றன.

,


Next Story