கைப்பந்து லீக்: கொச்சி அணி முதல் வெற்றி


கைப்பந்து லீக்: கொச்சி அணி முதல் வெற்றி
x

8-வது லீக் ஆட்டத்தில் ஆடிய கொச்சி அணிக்கு இது முதலாவது வெற்றியாகும்.

சென்னை,

9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 34-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ் அணி, கொச்சி புளூ ஸ்பைக்கர்சை சந்தித்தது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கொச்சி அணி 15-12, 15-12, 15-11 என்ற நேர் செட் கணக்கில் ஐதராபாத்தை தோற்கடித்தது. 8-வது லீக் ஆட்டத்தில் ஆடிய கொச்சி அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். ஐதராபாத் சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும்.

இன்றைய ஆட்டங்களில் சென்னை பிளிட்ஸ்- கோழிக்கோடு ஹீரோஸ் (மாலை 6.30 மணி), ஆமதாபாத் டிபென்டர்ஸ்- டெல்லி டூபான்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவடைகிறது. நாளை சூப்பர் 5 சுற்று ஆரம்பமாகிறது.


Next Story