

சென்னை,
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கோட்டயத்தில் 5 நாட்கள் நடந்தது.
இதில் நடப்பு சாம்பியனான சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி இறுதி லீக் சுற்றில் 25-12, 25-23, 29-31, 25-17 என்ற செட் கணக்கில் கோழிக்கோடு பல்கலை. அணியையும், 25-22, 25-21, 25-18 என்ற செட்டில் பாரதியார் பல்கலை. அணியையும், 20-25, 25-21, 25-21, 25-19 என்ற செட் கணக்கில் கோட்டயம் எம்.ஜி. அணியையும் தோற்கடித்து முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது.
இந்த போட்டியில் எஸ்.ஆர்.எம். உள்பட டாப்-4 இடங்களை பிடித்த அணிகள் இதே கோட்டயத்தில் இன்று முதல் 6-ந்தேதி வரை நடக்கும் அகில இந்திய பல்கலைக்கழக பெண்கள் கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.