ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : 2வது சுற்றுக்கு முன்னேறியது போபண்ணா ஜோடி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : 2வது சுற்றுக்கு முன்னேறியது போபண்ணா ஜோடி
x

Image Tweet : @AITA__Tennis

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரில் நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- ஆஸ்திரேலியாவின் டக்வொர்த்,பால்மன்ஸ் ஜோடியுடன் மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-5), 4-6, 7-6 (10-2) என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.


Next Story