கனடா ஓபன் டென்னிஸ்; ஜெசிகா பெகுலா இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

உலகின் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

மாண்ட்ரியல்,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அங்குள்ள டொராண்டோ, மாண்ட்ரியல் நகரங்களில் நடந்து வருகின்றன. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

அரையிறுதி போட்டி ஒன்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார். இதில் பெகுலா 6-2, 6-7 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வென்று இறுதி சுற்றுக்குள் நுழைந்தார். இதன்மூலம் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்வியாடெக் கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com