செங்டு ஓபன் டென்னிஸ்; யூகி பாம்ப்ரி இணை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பீஜிங்,

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, பிரேசிலின் ரப்லேல் மாடோஸ்-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் பாம்ப்ரி-ஒலிவெட்டி ஜோடி 6-3, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் மாடோஸ்- இவான் டோடிக் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பாம்ரி ஜோடி, பிரான்சின் சாடியோ டொம்பியா - பேபியன் ரிபோல் ஜோடியை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com