மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

image courtesy: AFP
ஸ்வியாடெக் 3-வது சுற்று ஆட்டத்தில் சொரானா சிர்ஸ்டியா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
மாட்ரிட்,
களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), வாங் சையு (சீனா) உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-1 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இவர் தனது 3-வது சுற்று ஆட்டத்தில் சொரானா சிர்ஸ்டியா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
மற்ற ஆட்டங்களில் முறையே ஒன்ஸ் ஜாபேர், கோகோ காப், மேடிசன் கீஸ், மரிய சக்காரியா போன்ற முன்னணி வீராங்கனைகள் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
Related Tags :
Next Story






