சமூக ஊடகத்தில் நம்பர் ஒன் இடம் பிடித்த டென்னிஸ் பிரபலம்...


சமூக ஊடகத்தில் நம்பர் ஒன் இடம் பிடித்த டென்னிஸ் பிரபலம்...
x
தினத்தந்தி 24 Nov 2022 6:12 AM GMT (Updated: 2022-11-24T11:43:31+05:30)

டென்னிஸ் வீராங்கனை ரேச்சல் ஸ்டல்மேன் தனது கவர்ச்சியை வெளிப்படுத்தி சமூக ஊடகத்தில் நம்பர் ஒன் இடம் பிடித்து உள்ளார்.நியூயார்க்,


டென்னிஸ் விளையாட்டில் முன்னணி வீரர், வீராங்கனைகளுக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். அவர்களில் பலர் வீரர்களின் தீவிர ரசிகர்களாகவும், ஒரு சிலர் அவர்களை ரோல் மாடலாகவும் கூட வைத்திருப்பார்கள்.

முன்னணியில் இல்லாதபோதும், சிலர் தங்களது துறைகளில் ரசிகர்களை ஈர்த்து வைத்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. சமூக ஊடகங்கள் பெருகியுள்ள காலத்தில், அதன் வழியே பலரும் ரசிகர்கள் வட்டங்களை விரிவாக்கி உள்ளனர்.

அவர்களில் ஒருவர் டென்னிஸ் வீராங்கனை ரேச்சல் ஸ்டல்மேன். ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் மற்றும் எம்மா ராடுகானு போன்றவர்கள் டென்னிஸ் விளையாட்டில் முன்னணியில் இருப்பதுடன் சமூக ஊடக தளங்களிலும் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள், பின்தொடர்பவர்களை கொண்டுள்ளனர்.

ஆனால், விளையாட்டில் முன்னணி பெற போராடும் சூழலில் இருந்து விலகி, சமூக ஊடகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ரேச்சல் இறங்கினார். அது அவருக்கு பலனளித்து உள்ளது.

அமெரிக்காவின் மிசோரி பகுதியில் செயின்ட் லூயிஸ் நகரை சேர்ந்தவரான ரேச்சல், டிக்டாக்கில் பிரபல நபரானார். அவரது தந்திரம் நிறைந்த ஷாட்டுகளை பார்ப்பதற்காகவே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை டிக்டாக்கில் பின்தொடருகின்றனர்.

இன்ஸ்டாகிராமிலும் பிரபலமடைந்துள்ள ரேச்சல் 2.32 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். இதனால், டென்னிசில் சமூக ஊடகம் வழியே அதிக தாக்கம் ஏற்படுத்தியவர்களின் வரிசையில் ரேச்சல் நம்பர் ஒன் இடம் பிடித்து உள்ளார்.

இதற்கேற்ப இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் இடம் பெற்று இருக்கும். டென்னிசை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்வதற்கான முயற்சியில் இறங்கி உள்ளேன் என கூறும் அவர் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதுபற்றி மேக்சிம் என்ற செய்தி இதழுக்கு ரேச்சல் அளித்த பேட்டியில் கூறும்போது, தடகள வீராங்கனையாக நான் விரும்பினேன். கல்லூரியில் டென்னிஸ் விளையாடும்போது, பல குணங்களை கற்று கொண்டேன். நேர நிர்வாகம், பணி நெறிமுறைகள் மற்றும் கடினம் வாய்ந்த சூழலில் இருந்து மீண்டு வரும் தன்மை ஆகியவற்றை கற்று கொண்டேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் டென்னிசை எனது தொழிலாக மாற்றி கொண்டேன்.

பெரிய டென்னிஸ் போட்டிகளுக்கு தயாராவது, பயிற்சி பெறுவது என்பதற்கு பதிலாக தற்போது, எனது தொழிலில் உள்ள அனைத்து விசயங்களிலும் நான் கவனம் செலுத்த தொடங்கி உள்ளேன்.

விளையாட்டில் மேற்கொள்ளும் பல்வேறு விசயங்களையும் எப்படி சிறப்புடன் செய்ய முடியும் என கவனம் செலுத்தி வருகிறேன் என கூறியுள்ளார்.

கடந்த காலங்களை போல் நீங்கள் டாப் 3 நபர்களில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் முக்கியமில்லை. அதுவும் பெண்கள் தரப்பை எடுத்து கொண்டால், திறமைகள் மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்த ஒன்றாக தற்போது நிலைமை உள்ளது என கூறுகிறார்.

கோல்ப் விளையாட்டில் தனது டிப்ஸ், எண்ணங்கள் மற்றும் ஆலோசனைகளை சமூக ஊடகம் வழியே பிரபல வீராங்கனை பெய்ஜ் ஸ்பைரனாக் வெளிப்படுத்தி வருகிறார். அதனை நான் மதிக்கிறேன். இதனை போன்று டென்னிசையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பம் என ரேச்சல் கூறியுள்ளார்.


Next Story