மலேசியா ஓபன் டென்னிஸ்: திரீஷா-காயத்ரி ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி

image courtesy: AP via dt next
மலேசிய ஓபன் டென்னிசின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் திரீஷா-காயத்ரி ஜோடி தோல்வியடைந்தது.
கோலாலம்பூர்,
மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் திரீஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி பல்கேரியாவின் கேபிரியல்லா ஸ்டோவா-ஸ்டீபனி ஸ்டோவா சகோதரிகளுடன் மோதினர்.
ஒரு மணிநேரம் ஒன்பது நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கேபிரியல்லா-ஸ்டீபனி ஜோடி 21-13,15-21,21-17 என்ற புள்ளி கணக்கில் திரீஷா-காயத்ரி ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





