விம்பிள்டன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறினார் லோரென்சோ முசெட்டி

இத்தாலியின் லோரென்சோ முசெட்டி, பிரான்சின் ஜியோவானி எம்பெட்ஷி பெரிகார்ட் உடன் மோதினார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் லோரென்சோ முசெட்டி, பிரான்சின் ஜியோவானி எம்பெட்ஷி பெரிகார்ட் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த லோரென்சோ முசெட்டி, ஆட்டத்தின் அடுத்தடுத்த செட்களை 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் இந்த ஆட்டத்தில் லோரென்சோ முசெட்டி 4-6, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜியோவானி எம்பெட்ஷி பெரிகார்ட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com