வாலிபரால் கற்பழிக்கப்பட்டு கர்ப்பமான 17 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை

வாலிபரால் கற்பழிக்கப்பட்டு கர்ப்பமான 17 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவுரங்காபாத்தில் நடந்தது.
வாலிபரால் கற்பழிக்கப்பட்டு கர்ப்பமான 17 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை
Published on

அவுரங்காபாத், 

வாலிபரால் கற்பழிக்கப்பட்டு கர்ப்பமான 17 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவுரங்காபாத்தில் நடந்தது.

விஷம் குடித்து தற்கொலை

அவுரங்காபாத் மாவட்டம் வீர்காவ் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகளான 17 வயது சிறுமி. கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து உள்ளாள். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தாள்.

தகவல் அறிந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய பரிசோதனை அறிக்கையில் சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பெற்றோரிடம் விசாரித்தனர்.

கற்பழிப்பு

இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதே பகுதியை சேர்ந்த உறவினரின் மகன் (வயது25) அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வருவது வழக்கம். சம்பவத்தன்று வாலிபர் வீட்டிற்கு வந்த போது சிறுமி தனியாக இருந்தாள். அப்போது சிறுமியை மிரட்டி கற்பழித்து உள்ளார். இதனை யாரிடம் தெரிவித்தால் உன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இதனால் பயந்து போன சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் தெரிவிக்கவில்லை. இதை வாலிபர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பல தடவை சிறுமியை மிரட்டி கற்பழித்ததால் கர்ப்பம் அடைந்தாள். இது பெற்றோருக்கு தெரிந்தால் அவமானம் என கருதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உறவினர் வாலிபரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com