ஹீட்டர் போட்டு இருந்த வாளியை தொட்ட 2 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியில் ஹீட்டர் போட்டு இருந்த வாளியை தொட்ட 2 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
ஹீட்டர் போட்டு இருந்த வாளியை தொட்ட 2 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
Published on

மும்பை,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா பகுதியில் உள்ள ஏக்தா வால்மீகி வெல்பர் சொசைட்டியில் வசித்து வருபவர் தேவ் கட்கா. இவரது மகன் அன்ஷ் (வயது 2). தேவ் கட்கா நேற்று முன்தினம் மதியம் குளியல் அறையில் ஹீட்டர் மூலமாக வெந்நீர் வைத்தார். அப்போது ஹீட்டரை வாளி தண்ணீரில் போட்டுவிட்டு தேவ் கட்கா வேலை செய்ய சென்றுவிட்டார். இந்தநிலையில் குளியல்அறைக்கு சென்ற சிறுவன் அன்ஷ் ஹீட்டர் இருந்த வாளி தண்ணீருக்குள் கை வைத்தான். இதில் அவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து அச்சோலே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹீட்டர் போடப்பட்டு இருந்த தண்ணீர் வாளியை தொட்டு சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நாலச்சோப்ரா பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com