முகநூலில் நட்பானவரால், இளம் பெண்ணுக்கு பிறந்த குழந்தை

புதுச்சசேரி மாநிலம் திருபுவனையில் முகநூலில் நட்பானவரால், இளம் பெண்ணுக்கு பிறந்த குழந்தையை கட்டப்பையில் விட்டுவிட்டு சென்றதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகநூலில் நட்பானவரால், இளம் பெண்ணுக்கு பிறந்த குழந்தை
Published on

திருபுவனை

திருபுவனை சீனிவாச நகரை சேர்ந்தவர் தேசிங் என்பவர் வீட்டின் அருகில் குழந்தை அழும் சத்தம் கேட்டு சென்று பார்த்தார். அப்போது ஒரு பிக்ஷாப் கட்டப்பையில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த திருபுவனை போலீசார் குழந்தையை மீட்டு திருபுவனை சுகாதார மையத்தில் ஒப்படைத்தனர்.

திருபுவனை போலீசார் விசாரணை செய்ததில், திருபுவனையை சேர்ந்த 23 வயது இளம்பெணின் குழந்தை என்பதும், கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு முகநூலில் நட்பாக பழகிய ஒருவர், அந்த இளம்பெண்ணை ஏமாற்றி உல்லாசமாக இருந்து கர்ப்பமாக்கியதும் தலைமறைவு ஆகிவிட்டார். தனக்கு பிரசவலி வந்த நிலையில் வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் பெண் குழந்தையை அப்பெண் பெற்றெடுத்துள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் ஒரு கட்டப்பையில் வைத்து அருகில் இருந்த வீட்டின் அருகில் வைத்துவிட்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com