

திருபுவனை
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனையில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக சமீபத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அதனை சரிவர மூடாததால் பள்ளம் ஏற்பட்டள்ளது.
இந்த நிலையில் இன்று அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் ஒன்று பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்வது தடைப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் ஒருமணி நேரத்துக்கு பிறகு சரக்கு வாகனம் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது. இதன் பின் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.