வடிவேலு வெளியிட்ட மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்துக் கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் எழுதியுள்ள நூலை வடிவேலு வெளியிட்டுள்ளார்.
வடிவேலு வெளியிட்ட மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பு
Published on

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அதன் பின் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் இயக்குனர் ஆவதற்கு முன்பே சில நூல்களை எழுதி எழுத்தாளர் என்ற பட்டத்தையும் சூட்டியிருந்தார். இவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நூல்களை தொடர்ந்து மாரிசெல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலாக உச்சினியென்பது என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வெளியாகியிருக்கிறது. இந்த நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் நடிகர் வடிவேல் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com