இரு தரப்பினர் இடையே மோதல்

பாகூரில் குப்பை கொட்டுவதில் தகராறு காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்ப்பட்டது.
இரு தரப்பினர் இடையே மோதல்
Published on

பாகூர்

பாகூர் அடுத்த குடியிருப்பு பாளையம் பூங்காவனம் நகரை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 40). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பாரதி (38). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வநாயகி (47) என்பவருக்கும் குப்பை கொட்டுவது, வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.

இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com