மீனவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்

அரியாங்குப்பம் அருகே மீனவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்..
மீனவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்
Published on

அரியாங்குப்பம்

அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது 40). மீனவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முனியப்பன் (48) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

நேற்று வீராம்பட்டினம் கடற்கரையில் நின்று கொண்டிருந்த சுகுமாரிடம் முனியப்பன் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முனியப்பன், கீழே கிடந்த பீர்பாட்டிலை எடுத்து சுகுமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

பீர் பாட்டிலால் தாக்கியதில் சுகுமாருக்கு கழுத்து பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த தாக்குதல் குறித்து சுகுமார் அளித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முனியப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com