கூடலூர் அருகே 5 வது முறையாக சரக்கு லாரி கவிழ்ந்தது

கூடலூர் அருகே 5 வது முறையாக சரக்கு லாரி கவிழ்ந்தது
கூடலூர் அருகே 5 வது முறையாக சரக்கு லாரி கவிழ்ந்தது
Published on

கூடலூர்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்துக்கு சாலை செல்கிறது. இதில் கூடலூர் நாடுகாணியில் இருந்து கேரள எல்லையான வழிக்கடவு வரை வாகன விபத்துகள் அதிகளவு நடைபெற்று வருகிறது.

கடந்த 2 வாரங்களாக சரக்கு லாரிகள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து வருகிறது. கேரளாவில் இருந்து கூடலூருக்கு சரக்கு லாரி வந்தது. அந்த லாரி நாடுகாணியில் நடுரோட்டில் கவிழ்ந்தது.

ஊரடங்கு காலம் என்பதால் சரக்கு லாரிகள் மட்டும் இயக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவரும் காயமின்றி உயிர் தப்பினார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, நாடுகாணியில் ஒரே இடத்தில் 5 -வது முறையாக சரக்கு லாரி கவிழ்ந்து உள்ளது. பழுதடைந்த சாலை உள்பட பல்வேறு காரணங்களால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com