மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கழுத்தை நெரித்து கொலை செய்த நண்பன் கைது

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கழுத்தை நெரித்து கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கழுத்தை நெரித்து கொலை செய்த நண்பன் கைது
Published on

தானே,

தானே மாவட்டம் கல்யாண் கோல்சேவாடி பகுதியில் 25 வயது வாலிபர் பழைய பொருள் சேகரிக்கும் தொழில் செய்து வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு அதே தொழில் செய்யும் நண்பர் ஒருவருடன் சேர்ந்து மது குடித்தார். மதுகுடித்த போது போதையில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நண்பர் கயிற்றால் வாலிபரின் கழுத்தை நெரித்தா. இதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தநிலையில் நேற்று காலை வாலிபரின் உடல் கிடப்பது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வாலிபரை கொலை செய்த 28 வயது நண்பரை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com