மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுமி பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுமி பலி
Published on

மும்பை, 

மும்பையை சேர்ந்தவர் உமேஷ் (வயது32). இவர் கடந்த 4-ந்தேதி மனைவி வைசாலி (27) மகள் ரியான்சி (3) ஆகியோருடன் மும்பாதேவி கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பரேல்-லால்பாக் மேம்பாலத்தில் சென்ற போது முன்னால் சென்ற வாகனத்தை உமேஷ் முந்த முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிள் வாகனம் மீது உரசியதால் நிலைதடுமாறி 3 பேரும் சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் சிறுமி ரியான்சி உள்பட 3 பேரும் காயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ரியான்சி உயிரிழந்தாள். உமேஷ் மற்றும் அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிரது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com