2 விருதுகள் பெற்ற சிறுமி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் வாழ்த்து

2 விருதுகள் பெற்ற சிறுமி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றார்.
2 விருதுகள் பெற்ற சிறுமி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் வாழ்த்து
Published on

புதுச்சேரி

புதுச்சேரி மணவெளி தொகுதி தவளகுப்பம் சடாநகர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர், ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர். இவரது மனைவி சரண்யா. இத்தம்பதியின் மகள் ஷர்விகா (வயது 6). இவர் புதுவை செயின்ட் ஜோசப் குளுனி தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். அம்மாணவி 100 கண்டுபிடிப்புகள், 100 விஞ்ஞானிகளின் பெயர்களை 3 நிமிடம் 29 நொடிகளில் கூறி கலாம் உலக சாதனையாளர் விருது, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்ற சாதனையாளர் விருதுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று அந்த குழந்தையின் குடும்பத்தினர் சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com