குடிபோதைக்கு சிகிச்சை பெற்ற கூலித்தொழிலாளி தற்கொலை

நல்லாத்தூரில் குடிபோதைக்கு சிகிச்சை பெற்ற கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
குடிபோதைக்கு சிகிச்சை பெற்ற கூலித்தொழிலாளி தற்கொலை
Published on

நெடுங்காடு 

நல்லாத்தூரில் குடிபோதைக்கு சிகிச்சை பெற்ற கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

குரும்பாகரத்தை அடுத்த நல்லாத்தூர் அடைக்கலாபுரத்தைச் சேர்ந்தவர் மார்ட்டின் தேவராயர் (வயது 48), கூலித் தொழிலாளி. சாராயம் குடிக்கும் பழக்கம் உடையவர். இவரது மனைவி புனிதா ஆரோக்கியமேரி.

கடந்த 10 வருடங்களாக குடிப்பழக்கம் உள்ள மார்ட்டின் தேவராயர் உடல் நலிவுற்றார். எனவே, சாராயம் குடிப்பதை மறக்க திருவாரூரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கேயே சில மாதம் சிகிச்சைக்குப்பின் கடந்த ஒன்றரை மாதங்களாக மது குடிக்காமல் இருந்தார்.

இவரது குடிப்பழக்கத்தால் ஏற்கனவே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு, புனிதா ஆரோக்கியமேரி தனது மகள், மகனுடன் தனியாக தங்கிவேலைக்குப் போய் வந்தார்.

தற்கொலை

புதிதாக வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று தனது மகளிடம் ஆதார் கார்டை வாங்கிச் சென்ற மார்ட்டின் தேவராயர், நல்லாத்தூர் சாராயக்கடையில் சாராயம் குடித்தார்.

குடிப்பழகத்தை ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்திய பின், மீண்டும் சாராயம் குடித்த மார்ட்டின் தேவராயருக்கு அது மனவேதனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மேலப்படுகை என்ற இடத்தில் கருவேல மரத்தில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து நெடுங்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com