மீண்டும் சூறையாடப்பட்ட பேக்கரி கடை

ரெட்டியார்பாளையத்தில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக பேக்கரி கடை சூறையாடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மீண்டும் சூறையாடப்பட்ட பேக்கரி கடை
Published on

மூலக்குளம்

ரெட்டியார்பாளையத்தில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக பேக்கரி கடை சூறையாடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பேக்கரி கடை

புதுவை ரெட்டியார்பாளையம் வில்லியனூர் மெயின் ரோட்டில் பேக்கரி கடை உள்ளது. இந்த கடையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு அரசியல் கட்சியினர் அலுவலகம் கட்டுவதற்கு நன்கொடை கேட்டனர். ஆனால் பணம் கொடுக்கப்படவில்லையாம்.

இதனால் ஏமாற்றம் அடைந்த 7 பேர் கொண்ட கும்பல் கடந்த சில நாட்களுக்கு முன் பேக்கரி கடையில் புகுந்து மேலாளரை தாக்கி, கடையை சூறையாடிவிட்டு தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை கைது செய்தனர்.

மீண்டும் தாக்குதல்

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், சாலையில் கிடந்த சிமெண்டு கல்லை எடுத்து கடையில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, பொருட்களை சூறையாடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, பேக்கரியை அடித்து நொறுக்கிய பிரதீப் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரு வாரத்தில் 2-வது முறையாக பேக்கரி கடை சூறையாடப்பட்ட சம்பவம் வணிகர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பேக்கரி சூறையாடப்படும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com