குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லஞ்ச் பாக்ஸ்

வெவ்வேறு உணவு வகைகளை ஒரே பாக்சில் நிரப்பாமல், தனித்தனியாக ‘பேக்’ செய்யும் வகையிலான லஞ்ச் பாக்ஸை தேர்வு செய்யலாம். இது, உணவுப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்க உதவும். தரமான லஞ்ச் பாக்ஸ் பயன்படுத்தினால் உணவு விரைவாக கெட்டுப்போகாமல் இருக்கும்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லஞ்ச் பாக்ஸ்
Published on

ள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மதிய உணவை வழங்குவது முக்கியமானது. இதன் மூலம் அவர்களின் ஆற்றல், கற்கும் திறன், விழிப்புணர்வு ஆகியவை மேம்படும். அந்த வகையில் ஆரோக்கியமாகவும், குழந்தைகளுக்குப் பிடித்த வகையிலும் மதிய உணவை தயாரிக்க சில ஆலோசனைகள்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள்:

வார நாட்கள் முழுவதும் குழந்தைகளுக்கு மதிய உணவாக என்னவெல்லாம் வழங்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இதுகுறித்து ஒரு பட்டியல் தயார் செய்து கொள்வது நல்லது. இவ்வாறு திட்டமிடுவதன் மூலம் முன்கூட்டியே தேவையான பொருட்களை வாங்க முடிவதோடு, கடைசி நிமிட பதற்றத்தையும் தவிர்க்கலாம்.

குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்:

மதிய உணவு தயாரிக்கும்போதும், அதை பேக்கிங் செய்யும்போதும் அதில் குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள். இது அவர்களுக்கு உணவை வீணாக்கக்கூடாது என்ற எண்ணத்தை உருவாக்குவதோடு, பொறுப்புணர்வையும் ஏற்படுத்தும். மதிய உணவாக, உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளை ஆரோக்கிய மான முறையில் சமைத்துக் கொடுங்கள்.

தரமான லஞ்ச் பாக்ஸ்:

வெவ்வேறு உணவு வகைகளை ஒரே பாக்சில் நிரப்பாமல், தனித்தனியாக 'பேக்' செய்யும் வகையிலான லஞ்ச் பாக்ஸை தேர்வு செய்யலாம். இது, உணவுப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்க உதவும். தரமான லஞ்ச் பாக்ஸ் பயன்படுத்தினால் உணவு விரைவாக கெட்டுப்போகாமல் இருக்கும்.

எளிமையுடன் ஆரோக்கியம்:

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை சமைத்துக் கொடுப்பதோடு, சமையல் வேலையும் எளிதாக முடிய வேண்டும். அதற்கு தகுந்தவாறு சில உணவுகளை தேர்வு செய்யுங்கள். புரதம் நிறைந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான தின்பண்டங்களையும் மதிய உணவுடன் கொடுக்கலாம். சில குழந்தைகள் காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட மறுக்கலாம். அத்தகைய சமயங்களில் அவர்களுக்கு பிடித்த வடிவங்களில் பழங்கள், காய்கறிகளை நறுக்கி கொடுக்கலாம். இவ்வாறு செய்யும்போது குழந்தைகள் அதை விரும்பி சாப்பிடுவார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com