விவசாயத்துக்கு புதிய டிராக்டர் அர்ப்பணிப்பு

பாகூர் தொடக்க வேளாண்மை சங்கம் சார்பில் விவசாயத்துக்கு புதிய டிராக்டர் அர்ப்பணிக்கப்பட்டது.
விவசாயத்துக்கு புதிய டிராக்டர் அர்ப்பணிப்பு
Published on

பாகூர்

பாகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாய உழவு பணிக்காக, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டர் வாங்கப்பட்டது. அந்த டிராக்டர் பழுதடைந்து விவசாய பணிகளுக்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அப்பகுதி விவசாயிகள் புதிதாக டிராக்டர் வாங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். அதைத்தொடர்ந்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. முயற்சியால் 3 பேர் கொண்ட ஒரு நிர்வாக குழு அமைத்து புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி நிதி உதவி மூலமாக ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் புதிய டிராக்டர் மற்றும் ரோட்டாவேட்டர் வாங்கப்பட்டது.

இதனை விவசாய பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி பாகூரில் நடைபெற்றது. இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பாகூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் மதி என்ற பொன்னம்பலம், குமாரகிருஷ்ணன், ஹரிலிங்கம் ஆகியோரிடம் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com