அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு

புதுவையில் தங்கும் விடுதியில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் உயிரிழந்தார்.
அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு
Published on

புதுச்சேரி

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் பாலாஜி (வயது 53). சம்பவத்தன்று இவர் புதுவைக்கு சுற்றுலா வந்தார். புதுவை பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். மறுநாள் காலை அவரது அறை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள் கதவை தட்டிப்பார்த்தனர். இருப்பினும் திறக்கப்படாததால் அவர்கள் உருளையன்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பாலாஜி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com