விபத்தில் பள்ளிக்கூட ஊழியர் சாவு

நெல்லையில் நடந்த விபத்தில் பள்ளிக்கூட ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் பள்ளிக்கூட ஊழியர் சாவு
Published on

நெல்லை:

நெல்லை பேட்டையை சேர்ந்தவர் செல்லையா மகன் செல்வ நடராஜன் (வயது 29). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் செல்வ நடராஜன் நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை டவுன் தாலுகா அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததாக தெரிகிறது. அப்போது செல்வ நடராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட செல்வ நடராஜன் பலத்த காயம் அடைந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே செல்வ நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com