டவுன் பகுதியில், கல்லூரி விடுதியில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை

சிக்பள்ளாப்பூர் டவுன் பகுதியில் உள்ள கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டவுன் பகுதியில், கல்லூரி விடுதியில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை
Published on

கோலார் தங்கவயல்:

3-ம் ஆண்டு பட்டப்படிப்பு

சிக்பள்ளாப்பூர் தாலுகா பன்னிகுப்பா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவரது மகள் பவித்ரா. இவர் சிக்பள்ளாப்பூர் நகரில் உள்ள வேளான் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். அவரை, வாலிபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு காதலிக்கும் படி கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மாணவி பவித்ரா கல்லூரி விடுதியில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சக மாணவிகள் கொடுத்த தகவலின் பேரில் சிந்தாமணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

அப்போது வாலிபர் ஒருவர் பவித்ராவிடம் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காதலிக்கும்படி வற்புறுத்தியதாக, அவரது தந்தை ஸ்ரீநாத் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அந்த செல்போன் எண்ணை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த வாலிபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com