பீர் பாட்டிலால் நண்பரை தாக்கிய வாலிபர்

காரைக்காலில் மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் பீர்பாட்டிலால் நண்பரை தாக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீர் பாட்டிலால் நண்பரை தாக்கிய வாலிபர்
Published on

காரைக்கால்

காரைக்கால் மதகடி தோமாஸ் அருள் திடலைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24). இவர் கும்பகோணத்தில் நடைபெற்ற கபடி போட்டியில், 2-ம் பரிசு பெற்ற மகிழ்ச்சியில் நண்பர்கள் டேவிட், சூர்யா, அலெக்ஸ், ரமேஷ் உள்ளிட்ட சிலருக்கு மதகடி குடிநீர்தொட்டி அருகே மது விருந்து வைத்தார்.

அப்போது, கபடி அணி வெற்றி பெற நான்தான் காரணம் என ரமேஷ் கூறியதாகவும், அதற்கு பிரசாந்த் 'ஏன் சூர்யா நன்றாக விளையாடவில்லையா?' என கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ரமேஷ், கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் பிரசாந்தை தாக்கினார். பதிலுக்கு பிரசாந்த் தனது நண்பர்கள் அஜித், சிவக்குமார், கார்திக் ஆகியோருடன் சேர்ந்து ரமேஷை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து இரு தரப்பினர் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com