16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
Published on

பால்கர், 

பால்கர் மாவட்டம் வாடா அருகே நேகால்பாடா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 1-ந் தேதி இயற்கை உபாதை கழிக்க வீட்டில் இருந்து மறைவிடத்திற்கு சென்றாள். இதனை கண்ட அதே பகுதியை சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் சிறுமியை பின்தொடர்ந்தார். பின்னர் மறைவான இடத்திற்கு சென்ற பின் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள்.

இதன்படி சிறுமியின் பெற்றோர் வாடா போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com