இரு தரப்பினர் மோதல்

புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் போலீசார் ஒருரை கைது செய்தனர்.
இரு தரப்பினர் மோதல்
Published on

புதுச்சேரி

புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இரு தரப்பினரும் கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். மேலும் பலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com