'பறந்து போ' படத்தின் ரிலீஸையொட்டி மாரி செல்வராஜ் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள 'பறந்து போ' படம் இன்று வெளியாகி உள்ளது.
'பறந்து போ' படத்தின் ரிலீஸையொட்டி மாரி செல்வராஜ் வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ
Published on

"கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த 'ரோட் டிராமா'வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இன்று வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இயக்குனர் ராமின் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் அமெரிக்காவில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ராம் சாரின் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் அவருடன் தான் நான் இருப்பேன். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது அமெரிக்காவில் இருக்கிறேன். பறந்து போ படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டனர்.

இந்த கொண்டாட்டத்தை ராம் சாருடன் இருந்து கொண்டாட முடியவில்லை. ஆனால், நான் இங்கே அமெரிக்காவில் உள்ள தமிழர்களுடன் சேர்ந்து பறந்து போ படத்தை நாளை பார்க்க உள்ளேன். நீங்களும் குடும்பத்துடன் சென்று இந்த படத்தை பார்க்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com