இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

புதுவை ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் மாயமானார்.
Published on

புதுச்சேரி

புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகர் 1-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகள் திவ்யா (வயது 24). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று அவரது தாய் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மாலை வேலை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது மகள் திவ்யாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர், உறவினர் வீடுகளில் மாணவியை தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com