கோட்டக்குப்பம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

கோட்டக்குப்பம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டா.
கோட்டக்குப்பம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
Published on

விழுப்புரம்,

வானூர் தாலுகா சின்னகோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் முகம்மதுபரோஸ் மகன் முகம்மது ஷாஜகான் (வயது 20). ரவுடியான இவர் மீது கோட்டக்குப்பம் பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக முகம்மது ஷாஜகானை கோட்டக்குப்பம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் முகம்மது ஷாஜகானை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் உத்தரவிட்டார்.

இதையடுத்து முகம்மதுஷாஜகானை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com