கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.
Published on

துறையூர்:

துறையூர் திரவுபதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 35). இவர் துறையூர் பகுதியில் காட்டு அங்காயி கோவில் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றபோது தவறி விழுந்த மூழ்கியதாக கிடைத்த தகவலின்பேரில் துறையூர் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில் அங்கு வந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பாதாள கரண்டி மூலம் தேடி சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சரவணனை கிணற்றில் இருது பிணமாக மீட்டனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com