நூலிழையில் உயிர் தப்பிய உடுப்பி இளம்பெண்

இஸ்ரேல் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியதாக உடுப்பியை சேர்ந்த இளம் பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
நூலிழையில் உயிர் தப்பிய உடுப்பி இளம்பெண்
Published on

பெங்களூரு:-

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த மணிப்பாலை சேர்ந்த நான்சி நரோனா என்ற பெண் இஸ்ரேலில் வசித்து வருகிறார். இந்த நிலையில் போர் காரணமாக நான்சி நரோனா இஸ்ரேலில் வசித்து வந்த கட்டிடத்தின் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பெண் மிகவும் பதற்றம் அடைந்தார். உடனே அவர் மணிப்பாலில் உள்ள குடும்பத்தினருடன் செல்போனில் பேசினார்.

அப்போது அவர் இஸ்ரேல் மீது 3-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. நாங்கள் வசித்து வந்த கட்டிடம் மீதும் குண்டு விழுந்தது. இதில் எங்கள் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்தது. முன்கூட்டியே தகவல் அறிந்ததால் வெளியே ஓடி வந்துவிட்டேன். இதனால் நூலிழையில் உயிர் தப்பியுள்ளேன். பாதுகாப்பான இடத்திற்கு செல்லவேண்டும் என்றால் அனைத்து இடங்களிலும் குண்டு மழை பொழிகிறது. இதனால் எங்கு செல்வது என்று தெரியவில்லை என்று கண்ணீர் மல்க கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com