வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பெற்றோர்கள் கண்டித்த நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான அவர், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் 4-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் அஜித்குமார் (வயது 20). இவர் கடந்த சில மாதங்களாக மதுபோதைக்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இதை அவரது பெற்றோர்கள் கண்டித்த நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான அவர், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து ராமச்சந்திரன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com